Breaking News

தமிழகத்தை புரட்டி போடவரும் கஜா புயல்

அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. 



வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புயல் என கஜா புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
 
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 2 நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடக்கு அந்தமான்  கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.

'கஜா' புயல் நவம்பர் 16ல் கடலூர் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது.


மேலும், குமரி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது.  எனவே, அந்தமான் மற்றும் மத்திய தென் கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், 

நவம்பர் 13ம் தேதி வரை இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback