Breaking News

குவைத்தில் பெய்துள்ள மழைய பாருங்க

அட்மின் மீடியா
0
குவைத் சிட்டியில் மழை பெய்து நகரமே ஸ்தம்பித்துப் போய் விட்டது. 
வரலாறுகாணத மிக கனமழையால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளார்கள்.குவைத் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளக்காடாகியுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கியுள்ளனர். 
 
உங்கள் பார்வைக்கு வீடியோ   https://youtu.be/D5z0nuymjPQ
 


 
 
பெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது. 
 
பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் சமுதாய நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். துரித நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று குவைத் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Give Us Your Feedback