Breaking News

மத ரீதியான தாக்குதல் இந்தியா முன்னிலை

அட்மின் மீடியா
0
மத ரீதியான தாக்குதல்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை ..


மதம் சார்ந்த தாக்குதல்கள் அதிகம் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர் மார்க் ப்ரோமகர் என்பவர் தலைமையில் உலகம் முழுக்க பத்திரிக்கையாளர்களின் உதவியுடன் மதம் சார்ந்த பிரச்சனைகள், சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் போன்ற விஷயங்களை கருத்தில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 196 நாடுகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக  ஆய்வு முடிவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகில் 18 நாடுகள் சிறுபான்மையினருக்கு எதிராக பெரும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அந்த 18 நாடுகளில் இந்தியாவும் இடம் பிடித்து இருக்கிறது. முக்கியமாக இந்தியா முதல் 5 நாடுகளில் இடம்பிடித்து இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.


இந்தியாவை அடுத்து  சீனா, மியான்மர், அல்ஜீரியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளில்தான் சிறுபான்மையினருக்கு எதிராக மத ரீதியான தாக்குதல்கள் நடக்கிறது.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் போர் நடக்கும், சிரியா, காஸா , பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் கூட பிற மதத்தை சேர்ந்தவர்கள் இப்படி மோசமாக நடத்தப்படவில்லை என்று கூறுகிறார்கள். அதீத தேசியவாத கொள்கைதான் இதற்கு காரணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.


தகவல் உதவி

https://www.afp.com/en/news/15/religious-freedom-risk-one-five-countries-report-doc-1b156y1

Give Us Your Feedback