மலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோ
அட்மின் மீடியா
0
மலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோ
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை, தாருகாபுரம், ராமசாமியாபுரம் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த அவர்கள் 48 பேரும், 4 மாதங்களுக்கு முன் மலேசியாவுக்கு சென்றுள்ளனர்.
அங்குள்ள ஒரு மலைப்பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக அவர்களை அழைத்துச் சென்ற நிறுவனம், முதல் ஒரு மாத ஊதியத்தை மட்டும் கொடுத்துள்ளது. அதன் பிறகு 3 மாதங்கள் ஊதியம் கொடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் முறையிடும் வாட்ஸ் அப் வீடியோ ஒன்று சில தினங்களுக்கு சமூக ஊடகங்களில் பரவியது.
அதில், "ஒரு மாதம் மட்டுமே சம்பளம் கொடுத்தார்கள்
அடுத்து சம்பளம் கேட்டால் அடிப்போம் என்று சொல்கிறார்கள். பாஸ்போர்ட் எங்கள் கையில் இருக்கிறது என மிரட்டுகிறார்கள். 48 பேரும் காட்டுக்குள் மாட்டிக்கொண்டு இருக்கிறோம்.
நாங்கள் மாட்டிக்கொண்டிருப்பதை வீட்டுக்குக்கூட சொல்ல முடியாத நிலைமை" எனக் கூறியுள்ளனர்.
தாங்கள் உயிரோடு ஊர் திரும்ப உதவுமாறு கோரியிருந்த அவர்கள், "வெளிநாடு என நம்பி வந்து ஏமாந்துட்டோம்" எனத் தெரிவித்துள்ளனர்.
சம்பளம், உணவு எதையும் முறையாக கொடுக்காமல் சித்ரவதை செய்வதாகவும் வேலையை முடிக்காமல் சென்றால் கொன்று தான் வீட்டுக்கு அனுப்புவோம் என மிரட்டியதாகவும் அந்த வாட்ஸ் அப் வீடியோவில் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட கண்ணீர் வீடியோ
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மற்றொரு வீடியோவில் மலேசிய சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ தெரிவித்துள்ளார்.
மலேசிய மனித வளத்துறை அமைச்சர் குலசேகரன் உதவியுடன் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் நன்றாக உள்ளனர். அவர்களுடைய பாதுகாப்புக்கு நானே பொறுப்பேற்றுள்ளேன்" என கூறியிருக்கும் காமாட்சி துரைராஜூ,
தொழிலாளர்களின் கோரிக்கை வீடியோவை இனியும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், அவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags: மறுப்பு செய்தி