Breaking News

பட்டாசு வெடித்தற்க்காக வழக்கு பதிவு

அட்மின் மீடியா
0

தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் இந்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன

இந்நிலையில்
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 181 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது இதுவரை  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

நெல்லை  6 வழக்குகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்  8 வழக்குகள்

கோவையில் 30 வழக்குகள்

விழுப்புரம் பகுதியில்  80வழக்குகள்

திருப்பூரில்  57 வழக்குகள்

என  இதுவரை 181 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Give Us Your Feedback