Breaking News

தமிழகத்தை மிரட்ட வரும் அடுத்த மழை

அட்மின் மீடியா
0
நாளை மறுநாள் முதல் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை, தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தாய்லாந்தை ஒட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு நகர்ந்து வருகிறது. இது தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகையால் தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 30ம் தேதியும், டிசம்பர் 1ம் தேதியும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
  
கஜா புயலுக்கு முன்பாக ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டது. எச்சரிக்கையை போலவே, கஜா புயலால் சேதமும் மிக அதிகமாக இருந்தது. மஞ்சள் எச்சரிக்கை எனப்படுவது, ரெட் அலர்ட்டுக்கு முந்தைய நிலையாகும்.

நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html 

Give Us Your Feedback