Breaking News

கர்நாடக இடைத்தேர்தலில் பாஜக படு தோல்வி

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் நடைபெற்ற
3 நாடாளுமன்ற
மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது

கடந்த நவம்பர்
3ம் தேதி அங்கு 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

ஷிவமோகா,
பெல்லாரி
மாண்டியா ஆகிய மூன்று நாடாளுமன்ற தொகுதிகளிலும்,

ராமநகர்,
ஜம்கண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளும் தேர்தல் நடந்தது.

நடந்து முடிந்த இந்த தேர்தலில் 65 சதவிகித வாக்குகள் பதிவானது.

இதில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.

பாஜக தனியாக தேர்தலை சந்தித்தது.

ஷிவமோகா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இங்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பிஒய் ராகவேந்திரா அந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

குறைந்த  வாக்குகள் 39480 வித்தியாசத்தில் மஜத கட்சியை சேர்ந்த எஸ் மதுபங்கரப்பா தோல்வி அடைந்துள்ளார்.

இங்கு மட்டும்தான் பாஜக வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஎஸ் உகாரப்பா அந்த தொகுதியில் 1,98,307 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

பாஜகவின் கோட்டையான பெல்லாரி தொகுதியை கைப்பற்றி உள்ளது காங்கிரஸ்.

மாண்டியா
நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மஜத கட்சியை சேர்ந்த சிவராமேகவுடா அந்த தொகுதியில் 324943 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ராமநகரம் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

மஜத கட்சியை சேர்ந்த முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி அந்த தொகுதியில் 109137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.

ஜம்கண்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த்சித்து யமகவுடா அந்த தொகுதியில் 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்

தற்போது நாடாளுமன்றத்தில் பாஜக 2 உறுப்பினர்களை இழந்துள்ளது

Give Us Your Feedback