Breaking News

நீட் தேர்வு புதிய கட்டுப்பாடுகள்

அட்மின் மீடியா
0
இந்த ஆண்டு நீட் தேர்வு  2019 தேர்வு நேரம் மதியம்  2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை என, மாற்றப்பட்டுள்ளது. 


மேலும்
ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும்.

ஆதார்' எண் கட்டாயம் இல்லை பட்டியலிடப்பட்ட ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம்

தேர்வு மையத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

தேர்வு வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது விரல் ரேகையையும், கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

தேர்வில் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்

பிளஸ் 2வில், இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம் மேலும் பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம்


நீட் தேர்விற்க்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது, 17; அதிகபட்ச வயது, 25 என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது



மேலும்  விபரங்களுக்கு  ntaneet.nic.in 


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் 
 

https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html

Give Us Your Feedback