நெயில் பாலிஷ் போடகூடாது தேவ்பந்த் பத்வா
இஸ்லாமிய பெண்கள் நெய்ல் பாலிஷ் போடக்கூடாது என்று தேவ்பந்த் மதரஸா பத்வா
இஸ்லாமியர்கள் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைச் செய்யக் கூடாது என்பது குறித்து தேவ்பந்த் 'பத்வா' உத்தரவு பிறப்பிப்பது உண்டு.
இஸ்லாமிய பெண்கள் தொழுகையில் போது நெய்ல் பாலிஷ் போடகூடாது என்று தேவ்பந்த் தற்போது 'பத்வா' உத்தரவு விதித்துள்ளது.
நெயில் பாலிஷ் போட்டுகொள்வது இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானதும் தவறானதும் ஆகும். அதற்கு பதிலாக பெண்கள் மருதாணி அணிந்துகொள்ளலாம்.
பெண்கள் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
ஆனால் பெண்கள் தொழுகைக்கு முன்னதாக நெய்ல் பாலிஷ் அணிந்திருந்தால் முழுமையாக நீக்கி விட வேண்டும்.
ஏனென்றால் பெண்கள் அணிந்திருக்கும் நெய்ல் பாலிஷானது, தொழுகைக்கு முன்னால் பெண்கள் தங்கள் கைகளை 'ஒது' செய்யும்போது, அவர்களது நகத்தினை முழுமையாகி சுத்தம் செய்ய விடாமல் தடுக்கிறது என்பதால் நெய்ல் பாலிஷ் போடதடை அளிக்கபடுக்கின்றது என்று அறிவித்துள்ளது