Breaking News

தமிழகத்தை மிரட்டும் கஜா புயல்

அட்மின் மீடியா
0
தமிழகத்திற்க்கு மிக அருகே 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார்.


தமிழகத்தை நோக்கி அடுத்த இருநாட்களில் வர இருக்கும் கஜா புயல் மிகக் கடுமையான புயலாக இருக்கும்.


மேற்கு தென் மேற்காக வேகமாக நகர்ந்து வரும் கஜா புயல் வரும் 15-ம் தேதி புதுச்சேரி, கடலூர் பகுதியில் கரையைக் கடக்கலாம்்்்்்்

தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் ஆழ்ந்த புயலாக மட்டுமல்லாமல் கடும் புயலாகவும், கடல்பகுதியில் மிகக் கடும் புயலாகவும் இருக்கும்.


வடக்கு தமிழக கடற்பகுதியை நெருங்கும்போது காற்று தீவிரமாகும். மணிக்கு 100 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது


சென்னை வானிலை மையம் அறிவிக்கும் ரெட் அலர்ட் என்பது புயலோடு தொடர்புடையது. ஆதலால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
24 மணிநேரத்தில் 200மிமீ மழையைப் பெய்துவிட்டு செல்லும்.


புதுச்சேரி அல்லது கடலூர் பகுதியில் கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்பின், புயல் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குள் செல்லும்.

கடலூரை நோக்கி கஜா புயல் சென்றுவிட்டால் சென்னைக்கு குறைந்த அளவே பாதிப்பு இருக்கும்.
இப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும்.


சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். 15-ம்தேதியில் இருந்து காற்றுவீசக்கூடும்


தமிழக கடற்கரைப்பகுதிகளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களில் மழை இருக்கும். வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை இருக்கும்.


இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் மழை எங்கெல்லாம் பெய்யும் என்ற சாட்டிலைட் காட்சிகளை பார்க்க கிளிக் செய்யுங்கள்

Give Us Your Feedback