வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா
புயல் வரும் 15ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை
கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை
5.30 மணியளவில் புயலாக மாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
அறிவித்துள்ளது.
இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த
24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும்,
அடுத்த 3 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும்
என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக, நாளை அதிகாலை முதல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று
வீசும் என்றும், வரும் நவம்பர் 14ஆம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும்
என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நாளான நவ., 15ம் தேதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 15ஆம் தேதி
கஜா புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை
கடக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல்
காரணமாக நாளை முதல் 15ஆம் தேதி வரை வங்கக் கடல் கடும் சீற்றத்துடன்
காணப்படும் என்பதால், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப
வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மழை எங்கெல்லாம் பெய்யும் என்ற சாட்டிலைட் காட்சிகளை பார்க்க
கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_15.html
மேலும் மழை எங்கெல்லாம் பெய்யும் என்ற சாட்டிலைட் காட்சிகளை பார்க்க
கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_15.html
