Breaking News

பட்டாசு வெடித்த மகன் தந்தை கைது

அட்மின் மீடியா
0

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்து இருந்தது.

அதன்படி தீபாவளி நேரத்தில் 2 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கால நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த 2 மணி நேரத்தை மாநில அரசே தீர்மானித்து கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லியில் காசிபூர் என்ற பகுதியில் சிறுவன் நிறைய பட்டாசுகளை வெடித்து விட்டான்.

வெடி சத்தத்தை கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இப்படியெல்லாம் வெடிக்க கூடாது, அது தவறு என்று சொல்லி எச்சரிக்கையும் செய்திருக்கிறார்கள். ஆனால் சிறுவனோ தொடர்ந்து வெடித்து கொண்டே இருந்தான்.

இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் அளித்து விட்டார்கள். போலீசாரும் விரைந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுவன் செய்த தவறுக்கு அவரது தந்தையை கைது செய்து அழைத்து சென்றனர்.

பின்னர் அவர் மீது எப்ஐஆரும் பதிவு செய்து விட்டார்கள்.

சுப்ரீம் கோர்ட்டின் நேரக்கட்டுப்பாட்டுக்கு பிறகு, பட்டாசு வெடிப்பதில் பதிவாகும் முதல் வழக்கு இதுவாகும் என்பது .

Give Us Your Feedback