நாய்கறி இல்லை ஆட்டுக்கறிதான் உண்மை வெளிவந்தது
அட்மின் மீடியா
0
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறிதான் நாய்க்கறி அல்ல
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 17ம் தேதி ஜோத்பூர் விரைவு ரயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டுக்கறிதான்; நாய்க்கறி அல்ல
நாய்க்கறி என அவசரப்பட்டு அவர்கள் எடுத்த முடிவு காரணமாக மக்கள் மத்தியில் இத்தனை நாட்களாக நாய்க்கறி வதந்தி நிலவியது. ஆட்டுக்கறிதான் என்று
உறுதியாகி உள்ளது. இதற்கு எதிராக பரப்பப்பட்ட பல வதந்திகள் தற்போது பொய்
என்று நிரூபணம் ஆகியுள்ளது.
இனியாவது உரிய ஆதாரங்கள் இல்லாமல் வதந்தி பரப்ப கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்
மேலும் நாம் ஆரம்பம் முதலே அது நாய்கறி இல்லை ஆட்டுகறிதான் என்று அடுக்கடுக்கான ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டோம்
அது நாய்கறி இல்லை ஆட்டுக்கறிதான் என்ற எமது ஆதாரபூர்வ செய்தியினை பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
