தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
கடந்த 2 தினங்களாக சாதரணமாக பெய்த மழை நேற்று இரவு முதல் குமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகை, தருமபுரி உள்ளிட்ட
மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில்
கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்
தெரிவித்துள்ளது.
தற்போது மாலத்தீவு முதல் தெற்கு கொங்கன் பகுதி
வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், மாலத்தீவு பகுதியில்
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும், அந்தமான் கடற்பகுதியில் குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
அடுத்த
24 மணி நேரத்தில், தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட
மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெயும். தென் தமிழகத்தில் ஒரிரு
இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று வானிலை மையம்
தெரிவித்துள்ளது
