தந்தை பெயர் இல்லாமல் பான்கார்டு
அட்மின் மீடியா
0
தந்தை பெயரின்றி பான்கார்டு
வருமான வரித் துறை வழங்கும் பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவிப்பு
தற்போதைய சட்டங்களின்படி, வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு, தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின் பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.