Breaking News

வை பை கிரெடிட் டெபிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
தற்போது வருகின்ற புதிய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் வைபை போன்ற குறியீடுகளுடன் வருகின்றன





உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் வைபை போன்ற இந்தக் குறியீடு இருந்தால் அது உங்களுக்கு மிகவும் ஆபத்தானது நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்


எனவே வைபை உள்ள கார்டினை ஸ்வைப்  இயந்திரம் அருகே காண்பித்தால் போதும் பணம் உடனே டெபிட் ஆகிவிடும். பாஸ்வேர்டு தேவையில்லை

இந்தியாவில் தற்போது தான் இந்தச் சேவை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கார்டுகளுக்கும் இது கிடையாது, வைபை உள்ள கார்டுகளுக்கு மட்டும்

நன்மைகள்

ஸ்வைப் செய்வது போன்று இல்லாமல் இந்தக் கார்டுகளை வைத்து எடுத்துவிட்டாலே பரிவர்த்தனை செய்துவிடலாம்.

கார்டை யார் கையிலும் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

சிறிய தொகை பரிமாற்றத்திற்குக் பாஸ்வேர்டு   அவசியம் இல்லை.

அபாயமும் உள்ளது

இந்தக் கர்டுகளைப் பயன்படுத்தும் போது நிறைய அபாயங்கள் உள்ளது. உதாரணமாக கூட்டமான இடங்களில் பிஓஎஸ் இயந்திரத்துடன் ஒருவர் வந்து யாருக்கும் தெரியாமல் குறைந்த விலை பரிவர்த்தனை செய்ய முடியும். 

மார்டன் பிக்பாக்கெட்கள் அதிகம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் இந்தியாவிற்குப் புதிது என்பதால் அதிகம் பயன்பாட்டிற்கு வரும் போது தான் இதில் உள்ள சிக்கல்கள் எல்லாம் வெளிவரும்.

எச்சரிக்கை வீடியோ



Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback