நாளை முதல் கனமழை
அட்மின் மீடியா
0
தமிழகம்- புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை நாளை தீவிரமடையும்
நாளை முதல் தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என தெரிவித்தார்.
மேலும், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நவம்பர் 6ஆம் தேதிக்கு முன்னர் கரை திரும்ப வேண்டும் என்றும் பாலச்சந்திரன் வலியுறுத்தினார்.