Breaking News

மிதக்கும் மேம்பாலம் வீடியோ

அட்மின் மீடியா
0

மிதக்கும் மேம்பாலம் சிலிர்க்கும் குமரி மக்கள்!


மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் மீது பொதுமக்கள் நடக்கும்போது மிதப்பதுபோன்ற புதுமையான அனுபவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மார்த்தாண்டத்தில்  மேம்பாலம் அமைக்கும் பணி முடிவுறும் நிலையில்  உள்ளது. இதை தொடர்ந்து மார்த்தாண்டம் மேம்பாலம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. 

மேம்பாலத்தில் நடந்து செல்லும்போது சிறு அதிர்வு ஏற்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிலும் குழித்துறை தர்மசாஸ்தா கோயில் அருகில்  செல்லும்போது பாலத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது. என்று மக்கள் கூறினார்கள்.

இதன் வீடியோவை நீங்களும் பாருங்கள்




மேலும் தென் இந்தியாவின் முதல் மிகவும் நீளமான இரும்பு மேம்பாலம் இது ஆகும்.  இதன் நீளம் சுமார் 2.5 கிலோமீட்டர் ஆகும்

தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறுகையில், இந்த மோம்பாலம் முழுவதும் இரும்பினால் உருவாக்கி உள்ளோம் மேலும் மேம்பாலங்களை தாங்கும் பகுதியில் ஸ்பிரிங் போன்ற ஜாக்கப்சர் போன்ற வடிவமைப்பு உள்ளதால் அமைப்பு ஏற்படுத்தப்படிருக்கின்றது  அப்படி அமைத்தால்தான் வாகனங்கள் செல்லும்போது பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. எனவேதான் நடந்துசெல்லும் மக்களுக்கு மிதப்பதுபோன்றும், பாலம் ஆடுவதுபோன்றும் உணவு ஏற்படுகின்றது என்று கூறினார்கள்

அட்மின் மீடியா வாட்ஸ்ப் குருப்பில் இணைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html

Give Us Your Feedback