இந்தோனேஷிய விமானத்தில் மீட்கப்பட்ட குழந்தை செய்தியின் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
இந்தோனேஷிய விமானத்தில் மீட்கப்பட்ட குழந்தை செய்தியின் உண்மை என்ன?
கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளான இந்தோனேஷிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
அதில், விமானம் கடலில் விழுவதற்கு முன்பு அந்தக் குழந்தையின் அன்னை, குழந்தைக்கு உயிர்க்காக்கும் உடையை அணிவித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் தண்ணீரில் மிதந்த குழந்தை, உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் அன்னை உயிரிழந்துவிட்டார் என்றும், அந்தக் குழந்தைக்காக அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த செய்தி உண்மையா
அந்தத் தகவல் உண்மையல்ல. முற்றிலும் பொய்யான செய்தி
உண்மையில் அந்தக் குழந்தை விமான விபத்தில் மீட்கப்பட்டதல்ல.
அது கடந்த ஜூலை மாதம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட படகு விபத்தின் போது மீட்கப்பட்ட குழந்தை.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது விமான விபத்தில் மீட்கபட்டதாக பலரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்கின்றார்கள்
*ஆதாரம்*
*ஆதாரம்*
என்றும் மக்கள் நலனில் அட்மின் மீடியா
Tags: மறுப்பு செய்தி