Breaking News

கர்நாடகாவில் பதட்டம் 9 மாவட்டங்களில் 144 த்டை உத்தரவு

அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் அரசு சார்பில், திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் நடத்திய நடத்தி வரும் பெரும் போராட்டத்தின் காரணமாக 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




18வது நூற்றாண்டில் மைசூர் மாகாணத்தை ஆண்டு வந்த முஸ்லீம் மன்னர் திப்பு சுல்தான். இவர் வெள்ளையர்களுக்கு எதிரான போரின்போது கொல்லப்பட்டார்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற போது, திப்பு சுல்தான் ஜெயந்தி என்பது அரசு சார்பிலான விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார்.

திப்புசுல்தானின் சுதந்திர போராட்ட தியாகத்தை பாஜக கொச்சைப்படுத்துவதாக கூறி, பலத்த பாதுகாப்புக்கு நடுவே அரசு விழாவாக சித்தராமையா அரசு நடத்த துவங்கியது.

தற்போது காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில், முதல்வராக குமாரசாமி பதவி வகித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் அரசு விழாவாக திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

இதை எதிர்த்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களையடுத்து, பெங்களூரில் சுமார் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் 9 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Give Us Your Feedback