தீபாவளி பண்டிகை 8 முன்பதிவில்லாத ரயில்கள்
தீபாவளி பண்டிகை
8 முன்பதிவில்லாத ரயில்கள்
தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில்,
தாம்பரம் To நெல்லை மற்றும்
தாம்பரம் To கோவை வழித்தடங்களில் 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் To திருநெல்வேலி
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3 மற்றும் 5 ம் தேதி சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் 06055 புறப்பட்டு, அன்று இரவு 9.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.
திருநெல்வேலி-தாம்பரம்:
திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 4 மற்றும் 7 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமை
காலை 9.30 மணிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் 06056 புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
தாம்பரம் To கோவை
தாம்பரத்தில் இருந்து நவம்பர் 3 மற்றும் 5 ம் தேதி சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை காலை 7.45 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் 06053 புறப்பட்டு, அன்று மாலை 6 மணிக்கு கோவையை சென்றடையும்
கோவை To தாம்பரம்
கோவையில் இருந்து நவம்பர் 4 மற்றும் 7ம் தேதி ஞாயிறுக்கிழமை மற்றும் புதன்கிழமை காலை 10 மணிக்கு முன்பதில்லாத சிறப்பு ரயில் 06054 புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரத்தை அடையும்.
மொத்தம் 8 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி வழியாக நெல்லை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயிலில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவற்ற 2ம் வகுப்பு பொது பெட்டியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.