Breaking News

யார் அந்த 7 பேர் உங்களுக்கு தெரியுமா

அட்மின் மீடியா
0

யார் அந்த 7 பேர்

முருகன்

நளினி

பேரறிவாளன்

சாந்தன்

ராபர்ட் பயஸ்

ரவிச்சந்திரன்

ஜெயக்குமார்
  

மேலே உள்ள 7 நபர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யபட்ட குற்றவாளிகள்

நீதிமன்றத்தில்  1998-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது.

அப்போது நளினி, முருகன், சாந்தன் அவர்களுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் மேல்முறையீடு செய்ததால் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

தூக்கு தண்டனையை குறைக்க கோரி ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அந்த கருணை மனுவை கடந்த 2012-ம் ஆண்டு ஜனாதிபதி நிராகரித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களுக்கு காலதாமதமாக முடிவு செய்து கருணை மனு நிராகரித்துப்பட்டு இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருவதால் கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.

அதில் உச்சநீதிமன்றம்
ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம் என்று தீர்பளித்தது

தீர்பளித்து 2 மாதம் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை

மேலும் இது குறித்து இன்று நிருபர்கள் ரஜினிகாந்த் அவர்களிடம்
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்த கேள்விக்கு யார் அந்த 7 பேர் அதைப் பற்றி எனக்கு தெரியாது" என்று கூறி  அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தினார்

Give Us Your Feedback