38 இஸ்லாமியர்களை கொன்ற 16 போலிஸாருக்கு ஆயுள்தண்டனை
அட்மின் மீடியா
0
ஹஷிம்புரா
படுகொலை வழக்கு தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரிகள் 16 பேருக்கு
ஆயுள் தண்டனை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு:
நடந்தது என்ன ?
நடந்தது என்ன ?
மே, 22, 1987. அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தினால் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. அதேபோல் மீரட்
நகரிலும் கலவரம் பற்றி எரிந்தது, கலவரத்தில் உத்தரப்பிரதேச ஆயுதப் படையான BAC யின் 2 துப்பாக்கிகள் களவு போயின,
இதனையடுத்து ஹஷிம்புரா பகுதியை ஆயுதப்படையினர் சுற்றி வளைத்தனர். வீடு வீடாகச் சென்று அனைவரையும் அடித்து உதைத்து குற்றவாளிகளைத் தேடும் படலத்தில் ஈடுபட்டார்கள் அப்போது முதியோர், இளையோர் என்று 43 பேர்களை 41வது பட்டாலியனின் சி-கம்பெனியைச் சேர்ந்த மஞ்சள் லாரியில் ஏற்றிச் சென்றனர்.
இவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லாமல் காஸியாபாத்தில் கால்வாய் ஒன்றின் அருகே கொண்டு சென்று இறக்கினர். பிறகு பிஏசி படையினர் இவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி சில உடல்களை கால்வாயிலும் சில உடல்களை ஹிண்டான் நதியிலும் வீசி விட்டுச் சென்றனர். அதில் 38 பேர் கொல்லப்பட்டனர். பல உடல்கள் கண்டுபிடிக்கப் பட முடியவில்லை. 11 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது. ஆனால் இதில் ஒரு 5 பேர் சம்பவ இடத்தில் செத்தது போல் நடித்துத் தப்பினர். கால்வாயிலிருந்தும் நதியிலிருந்தும் நீந்தி தப்பிய 5 பேர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கே தொடரப்பட்டது. அவர்கள் தங்கள் பயங்கர அனுபவங்களை வாக்குமூலமாகப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கைக் கையாண்ட சிபி-சிஐடி 1996-ம்
ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதில் 19 போலீஸார் மீது
குற்றம்சாட்டப்பட்டது உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்ட
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. விசாரனை காலத்திலேயே 3 பேர்
இறந்துவிட்டார்கள்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விசாரணைகள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியதையடுத்து உச்ச நீதிமன்றம் வழக்கை டெல்லிக்கு மாற்றியது.
இதனையடுத்தே ஆயுதப் படையைச் சேந்த 19 பேர் மீது குற்றங்கள் தாக்கல் செய்யப்பட்டன, இதில் 3 பேர் விசாரணையின் போதே இறந்ததால் 16 பேர் மீது வழக்குப் போடப்பட்டது. 2014 மே மாதத்தில்தான் குற்றவாளிகள் தரப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 13 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, இந்த
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 போலீஸாரையும் விடுதலை செய்து டிஸ்ஹசாரி
நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்து. போதிய ஆதாரங்கள்
இல்லாததால், அவர்கள் விடுவிக்கப்படுவதாக அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த
தீர்ப்பை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கில் வாத, பிரதிவாதங்களைக் கேட்டறிந்த
நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 6-ம் தேதி தமது தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில்,
இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல்
ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்தது. அதில், குற்றம்சாட்ட முன்னாள்
காவல் துறை அதிகாரிகள் 16 பேருக் கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
இந்தத் தீர்ப்பை அடுத்து 31 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கிடைத்ததாக இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்