Breaking News

25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் தேர்வு எழுதலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

அட்மின் மீடியா
0
25 வயதிற்கு மேற்பட்டவர்களும் நீட்தேர்வு எழுதலாம் என சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.





நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை தளர்த்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 25 வயதிற்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். 


அத்துடன், வயது வரம்பு தளர்வு என்பது இறுதி தீர்ப்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளது.

நீட் தேர்வு விண்ணப்பத்திற்கான கால கெடுவை ஒருவார காலம் நீட்டிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது


இடஒதுக்கீட்டு பிரிவினர் 30 வயது வரை நீட் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ள நிலையில் தற்போது பொதுப்பிரிவினருக்கான வயதும் 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது 
குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன்( நவ.,30) முடிவடைகிறது. 


நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
 


Give Us Your Feedback