அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை
அட்மின் மீடியா
0
மத்திய தெற்கு வங்கக்கடலில் நிலவிய
காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்க்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை, திருவாரூர், தஞ்சை,
அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
