Breaking News

தமிழகத்தை புரட்டி எடுத்த புயல்கள்

அட்மின் மீடியா
0

இதுவரை தமிழகத்தை புரட்டி எடுத்த புயல்களின் பட்டியல்

 

இந்தியாவை பொறுத்தவரை வங்ககடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004 ம் ஆண்டு முதல் தான் தொடங்கியது


2005ம் ஆண்டு பியார், பாஸ், பனூஸ் என மூன்று புயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்கியது.

2008ம் ஆண்டு வந்த நிஷா புயல்  தமிழகத்தை தாக்கிய இந்த புயலால் தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். 22 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான மிகப்பெரிய  புயல் என்று நிஷாவை வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


2010 ம் ஆண்டு  ஜல் புயல் மணிக்கு சுமார் 60 கி.மீ. வேகத்தில்  சென்னை - நெல்லூரஇடையே 'ஜல்' புயலகரையைககடந்தது.


2011ம் ஆண்டு தானே புயல் வங்கக் கடலில் உருவாகி தமிழகத்தை தாக்கியது. அந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி உருவான இந்த புயல்தான் முதலாவது அதிதீவிரப் புயல் என்ற பட்டியலில் இடம் பிடித்தது. இது டிசம்பர் 30ம் தேதிதான் புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடந்தது.


2012 ம் ஆண்டு   'நீலம்' புயல் மணிக்கு சுமார் 83 கி.மீ. வேகத்தில் மகாபலிபுரத்தில் கரையைக் கடந்தது.


2013, ம் ஆண்டு  மடி' புயல், மணிக்கு சுமார் 120 கி.மீ. வேகத்தில் வேதாரண்யம் வழியாக கரையைக் கடந்தது.


2016 ம் ஆண்டு  வர்தா புயல்   மணிக்கு 155 கிலோமிட்டர் வேகத்தில் காற்று வீசியது. சென்னை புறநகர் பகுதியான பழவேற்காடு அருகே 6.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது.


2016 ம் ஆண்டு  டிசம்பர் மாதம் மற்றும் நாடா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்தது


2017 ம் ஆண்டு ஓகி புயல் ஓகி புயல் கன்னியாகுமாரியை புரட்டி போட்டது. மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.


2018  ம் ஆண்டு கஜா புயல் கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே 120 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.

Give Us Your Feedback