Breaking News

1 லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்க்கு நவம்பர் 20 ம்தேதி முதல் ராமர் பிள்ளை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
வரும் நவ. 20ம் தேதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதற்கான ரகசியத்தை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். ராமர் பிள்ளை


விருதுநகர் மாவட்டம்  இடையன் குளம் பகுதியை சேர்ந்தவர் ராமர் பிள்ளை. 1996ம் ஆண்டு இவரை பற்றி  உலகமே பேசியது. இதற்கு முக்கிய காரணம்   மூலிகைகளை கொண்டு பெட்ரோலை தயாரிக்கலாம் என்று சொல்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பல்வேறு இடங்களில் இவர் இந்த மூலிகை பெட்ரோலை செய்தும் காண்பித்தார். அது தீயில் எரிந்தது. இவரது இந்த கண்டுபிடிப்பை கண்ட பலர் இவரை வியந்து பார்த்து பாராட்டினர்.

இவர் அந்த ஆய்வின் போது கொதிக்கும் தண்ணீரில் சில மூலிகைகளை போட்டு கலக்குகிறார். அது தண்ணீரில் இருந்து எரிபொருளை உருவாக்குவதாக கூறுகிறார். தண்ணீரை விட எரிபொருள் லேசாக இருப்பதால் அந்த பாத்திரத்தில் தண்ணீர் கீழேயும், எரிபொருள் மேலேயும் வருகிறது. இதை பிரித்தெடுப்பது மூலம் நாம் மூலிகை பெட்ரோலை பெற முடியும் என கூறுகிறார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதி ராமர் பிள்ளையை சென்னைக்கு நேரில் அழைத்து மூலிகை பெட்ரோல் குறித்து கேட்டார். அவர் முன்பு மூலிகை பெட்ரோலை தயாரித்தும் காண்பித்தார். அவரை பாராட்டிய கருணாநிதி மத்திய அரசிற்கு இவரது கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை பெற உதவ வேண்டும் என கோரினார்.

அதனை தொடர்ந்து ராமர் பிள்ளை மூலிகை பெட்ரோலை தயார் செய்து விற்பனை செய்து வந்தார். மூலிகை பெட்ரோல் வாங்கி தங்கள் வாகனங்களில் பயன்படுத்திய பலருக்கும் வாகனத்தில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை என கூறினார்கள்.

அதன் பின்பு தான் ஆரம்பித்தது பிரச்சனை சென்னை ஐஐடியை சேர்ந்த பேராசியர்கள் சிலர் மூலிகை பெட்ரோலை  ஆய்வு செய்து  அவர் தயாரிப்பது பெட்ரோல் இல்லை. அவர் அதனை தயாரிக்கும் போது ஒரு குச்சியை பயன்படுத்துகிறார். அதனுள் டோலுவின், நாப்தா என்ற பெட்ரோலிய பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கிறோம். அவ்வாறு இருந்தால் அது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றுதான். இந்த டோலுவின், நாப்தா  தண்ணீரில் கலப்பதன் மூலம் எரிபொருள் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த எரிபொருளை வைத்து வாகனங்களை இயக்குவது என்பது முடியாத  விஷயம் அதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இவர் தயாரிப்பது எரிபொருள்தான் என்றாலும் அதனால் பெட்ரோலுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்தனர்.  


அதன்பின் மூலிகை பெட்ரோல் என கூறி மக்களை ஏமாற்றி ரூ.2 கோடிக்கும் அதிகமாக சம்பாதித்தாக ராமர் பிள்ளையின் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகள் நடந்த நிலையில் அவர் செய்தது மோசடி என கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டது. எனவே அவர் உட்பட 5 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (10ம் தே தி) நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கும் ஒரு முகநூல் பக்கம் சார்பில் ராமர் பிள்ளையின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில் அவர் வரும் நவ.20ம் தேதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் தான் மீண்டும் மூலிகை பெட்ரோலை தயாரிக்கப்போவதாகவும் பொதுமக்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் 4 ரூபாய்க்கு தரபோவதாக்வும் அறிவித்துள்ளார். 

நவ.20ம் தேதி என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Give Us Your Feedback