தொழில் தொடங்க மானியத்துடன் கடன்
அட்மின் மீடியா
0
படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லையா
சுயமாக தொழில் தொடங்க முதலீடு வேண்டுமா
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு
சுய தொழில் தொடங்குவதன் மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்க தமிழக அரசு UYEGP
(Unemployed Youth Employment Generation Programme)-படித்த வேலைவாய்ப்பற்ற
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கத் திட்டம்) என்ற திட்டத்தை
உருவாக்கியுள்ளது.
தொழில் தொடங்க விருப்பமுள்ள இளைஞர்கள் தங்கள் தொழிலுக்கு
தேவையான முதலீட்டினை இத்திட்டத்தின் மூலம் பெறலாம்.
இத்திட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்காக 15% சதவீதம் மானியத்துடன் ரூபாய் 5 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
திட்டத்தின் நோக்கம்
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவதின் மூலம் வேலை வாய்ப்பினை பெருக்குவது.
வயது 18 - 35
ஆண்டு வருமானம் ரூபாய்.150,000-க்குள் இருக்க வேண்டும்.
தற்போது நீங்கள் ஆன்லைன் மூலமாக கூட விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் மூலம் விண்னப்பிக்கhttp://www.msmeonline.tn.gov.in/uyegp/application_without_upload.php?id=New%20Application
விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ள
http://www.msmeonline.tn.gov.in/uyegp/status_verification.php?id=Track%20Your%20Status
