Breaking News

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்

அட்மின் மீடியா
0
டெங்கு காய்ச்சல் இரட்டை குழந்தைகள் மரணம்

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த இரட்டை குழந்தைகள் 7 வயது தீக்ஷாவும், தர்ஷனும் காய்ச்சல் காரணமாக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் கடந்த 5 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்துவந்தார்கள்

 
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் குழு சிறப்பான சிகிச்சை அளித்த போதிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர்.

3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவமனையை நாட வேண்டும். காய்ச்சல்தானே என அலட்சியம் வேண்டாம். அபாய கட்டம் வந்துவிட்டால் அதை குணப்படுத்துவது கடினம் ஆகும்.


டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்...

திடீரென கடுமையான காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட்/ 40 டிகிரி செல்சியஸ்), அதிகமான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் கண் கூசுதல், உடலில் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். இதோடு, எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback