வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ்
,
பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு
ரூ. 200,
ரூ. 200,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
ரூ. 300,
ரூ. 300,
12-ஆம் வகுப்பு, பட்டய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
ரூ. 400,
ரூ. 400,
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு
ரூ. 600
ரூ. 600
மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டு
வேலைவாய்ப்பு பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அத்துடன், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, இதர பிரிவினர் 40 வயதுக்குள்பட்டவராகவும்,
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் 45 வயதுக்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில்லை.
தகுதியுடையோர், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை உரிய வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.
