Breaking News

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்

அட்மின் மீடியா
0
உள்ளாட்சி தேர்தல் இன்னும் ஏன் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
 
 
 
கடந்த 2 வருடங்களாக உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடத்தப்படாமலேயே ஏதாவது காரணம் காட்டி தள்ளிகொண்டே வருகின்றது. 
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை  நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 
ஆனால் இந்த நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படாமலேயே இதுவரை உள்ளது
உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்திரவிட கோரி திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றினை பாரதி அவர்கள் தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், தமிழகத்துக்கு ஏன் இன்னும்  உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை என்று தமிழக தேர்தல் ஆணையத்துக்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
 
திலளிக்க வேண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்து அக்டோபர் 24-ம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது என்று கூறிய நீதிபதிகள், இன்னும் 4 வாரங்களுக்குள் மாநிலத் தேர்தல் ஆணையம் இது சம்பந்தமாக பதிலளிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Give Us Your Feedback