Breaking News

மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

அட்மின் மீடியா
0
முக்கிய அறிவிப்பு

ஃபனி புயல் எச்சரிக்கை விடுத்துள்ளதால்    முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...

மழையினால் மின்தடை ஏற்படலாம் எனவே
நீர் மோட்டர் போட்டு நீர் தொட்டியில் உடனுக்குடன் நீர் நிரப்பி வைத்து கொள்ளுங்கள்

மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள் பாட்டுக்கேட்பது வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்

பழுதடைந்த கட்டிடங்களுக்குள் அடைக்கலம் புகவேண்டாம்

வீட்டுக் கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டிக் கொள்ளவும்.

வீட்டில் உள்ள ஆவணங்களையும், விலை உயர்ந்த பொருட்களையும், தண்ணீர் புகாத அளவுக்கான இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களது வீடு பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தீர்கள் என்றால், புயல் வீசத் தொடங்கும் முன்பாகவே, பாதுகாப்பான, வேறு இடத்திற்கு சென்று விடவும்

இன்வர்ட்டர் உள்ளவர்கள் அவசர தேவைக்கு மட்டும் இன்வர்ட்டர் உபயோகித்து கொள்ளுங்கள் மேலும்


பிஸ்கட்

பால்

அவசர மாத்திரைகள்

தண்ணீர் கேன்

பேட்டரி செல்கள்

மெழுகுவர்த்தி

காய்கறிகள்

மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்

குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்

கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் மிகவும் கவனமாக ஓட்டவும்

இடி மின்னல் நேரங்களில் டி.வி பார்க்காதீர்கள்

பழைய சுவர் அருகில் இருக்காதீர்கள்

மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்

மழை நீர் தேங்கி திடீர் பள்ளம் ஏற்படும் எனவே ஜாக்கிரதை

மக்கள் நலனில் என்றும்....

Give Us Your Feedback