Breaking News

தித்லி புயல் கரையை கடந்தது தமிழகம் தப்பியது

அட்மின் மீடியா
0

ஒரிசா ஆந்திராஇடையே கரையை கடந்தது தித்லி புயல்

வங்கக்கடலில் சென்னைக்கு அருகே உருவான தித்லி புயல் அதி தீவிரமாக உருவெடுத்தது.

ஆனால் புயல் ஒரிசா நோக்கி நகர்ந்ததால்  தமிழகம் தப்பியது.

இந்நிலையில் இன்று அதி காலை 5.30 மணியளவில்  ஆந்திரா-ஒரிசா இடையே புயல் கரையை கடந்தது

புயல் கரையை கடந்ததன் தாக்கம் காரணமாக ஒரிசா மாநிலத்தில் பலத்த மழை பெய்துவருகிறது.

மரங்கள்முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் 3 லட்சம் பேர் வரையில் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்

மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. சுமார் 3 லட்சம் பேர் தாழ்வான பகுதிகள் மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரிசாவின் கோபால்பூர்

மற்றும் ஆந்திராவின் சிகாகுளம் அருகே மிகப் பெரிய நிலைச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது

கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

Give Us Your Feedback