Breaking News

இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பதவியேற்பு

அட்மின் மீடியா
0

இலங்கை பிரதமராக மீண்டும் ராஜபக்சே பதவியேற்பு

இலங்கையின்11-ஆவது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந் ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி வகித்தார் தற்போது அவர் அப்பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் ராஜபட்சவின் புதிய கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றியது 

ஆளும் கூட்டணியிலிருந்து இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின்  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக் கட்சி வெளியேறுவதாகக் கூறி ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து விட்டது. 

இதனால் உண்டான குழப்பமான அரசியல் சூழ்நிலையின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த  இலங்கை பிரதமர் ரணில் விக்ரம்சிங்கே பதவி நீக்கப்பட்டு ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்

மேலும் ராஜபக்சே பிரதமர் ஆனதற்க்கு பல அமைச்சர்கள் எதிர்ப்பு காட்டிவருகின்றார்கள்


Give Us Your Feedback