Breaking News

யார் இந்த ரெஹானா பாத்திமா

அட்மின் மீடியா
0

🤔 *இஸ்லாமிய பெயர் வைத்திருத்தால் இஸ்லாமியர் என்று ஆகிடாது*

❓யார் இந்த ரெஹ்னா பாத்திமா

👉🏻மதம் மாறியவராக

👉🏻பெண்ணியவாதியாக

👉🏻அடையாளபடுத்தி கொள்ளும் இந்த
பெண்

👉🏻சர்ச்சைக்கு பெயர் போனவர்.

சமீபத்தில் ஐய்யப்ப கோவிலுக்கு சென்று இருமுடி அணிந்து அங்கே குறை ஆடையுடன் போட்டோக்களை வெளியிட்டு மீண்டும்
சிக்கியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த முத்த போராட்டத்திலும் பங்கேற்று பரபரப்பு கிளப்பியவர் இந்த ரெஹானா

கடந்த மார்ச் மாதம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பரூக் கல்லூரியில், பேராசிரியர் ஒருவர், மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசியதற்கு எதிராக ரெஹனா பாத்திமா போராடினார்.

எனது உடல், எனது உரிமை என்பதை உணர்த்தும் விதமாகவும் ஆசிரியருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், தர்பூசணியுடன் மேலாடை அணியாத தனது அரைநிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த 2014ம் ஆண்டு KISS OF LOVE என்ற பொது இடங்களில் முத்தமிட்டுக்கொள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார்.

கடந்த 2016ம் ஆண்டு திருச்சூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் புலிகலி நிகழ்ச்சியில், புலி வேடத்தில் பங்கேற்ற முதல் பெண்மணி என்பதை பிரகடனப்படுத்திக் கொண்டார்.

அவரது கணவர் மனோஜ் இயக்கிய ஓரினச் சேர்க்கையாளர் பற்றிய EKA என்ற திரைப்படத்தில் ரெஹனா பாத்திமா நடித்துள்ளார்.

ஆடையுடன் இருமுடி சுமந்து கொண்டு சபரிமலை சென்றனர். அவர்கள், விரதம் எதுவும் இருக்கவில்லை. கோவிலுக்குள் உள்ளே நுழைய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் சபரிமலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர், பெண் உடல்களை  பாலியல் ரீதியாக அணுகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலாடையின்றி  ஆர்ப்பாட்டம் நடத்தி புகழ்பெற்றவர்.

💯 அறியாமை மக்கள் சிலர் இதற்கு உணர்ச்சி வச பட்டு வெறுப்பை பகிர்வது இந்து முஸ்லீம் கலவரத்துக்கு வழி வகுக்கும்.

🤔முஸ்லிம் பெயர் வைத்ததால் இவர் அறியாமையால் செய்யும் தவறுக்கு முஸ்லீம்கள்ள எப்படி பொறுப்பாவார்கள்.

✍🏼எந்த மதத்திலும் அறியாமை மக்கள் உள்ளார்கள்.

✍🏼தனி நபர் அறியாமைகளுக்கு அவர்களே பொறுப்பு.

🎙இஸ்லாம் எந்த மதத்தை பின்பற்றுபவரையும் இழிவு படுத்த சொல்லவில்லை.

ஆதாரம்👇🏼
📖நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை நிர்ணயித்திருக்கின்றோம்; அதனை அவர்கள் கடைப்பிடிக்கின்றார்கள்! எனவே, (நபியே!) இவ்விவகாரத்தில் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்ய வேண்டாம். நீர் உம் இறைவன் பக்கம் அழைப்பு விடுப்பீராக! திண்ணமாக, நீர் நேரிய வழியிலேயே இருக்கின்றீர்.
(அல்குர்ஆன் : 22:67)

💯மேலும் இது போல் சர்ச்சை மூலம் Publicity ஆக நினைக்கும் நபர்களை

👍🏼கண்டு கொள்ளாது இருப்பதே அறிவுடைமை ஆகும்.

Give Us Your Feedback