Breaking News

பட்டாசு விற்பனைக்கு தடை இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

நாடு முழுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

காற்றில் மாசு அதிகரித்து வருவதால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொது நல வழக்குகள் தொடரப்பட்டன.

இவற்றை விசாரித்த  உச்சநீதிமன்றம் இன்று கீழ்கண்ட உத்தரவு பிரபித்துள்ளது.


நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை இல்லை

பட்டாசு தயாரிக்கவும் தடை கிடையாது

ஆனால் 


தீபாவளி அன்று  இரவு 8  மணி முதல் 10  மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்


பகல் நேரத்தில் பட்டாசு  வெடிக்க உச்சநீதிமன்றம்   தடை விதித்து உத்தரவு.


ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதை ஏற்க முடியாது


அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசு விற்பனை செய்ய முடியாது


அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கவேண்டும்

என்று கட்டுப்பாட்டுகளையும் விதித்துள்ளது உச்சநீதிமன்றம்

Give Us Your Feedback