Breaking News

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை உங்கள் மொபைல் போனில் வாங்குவது எப்படி

அட்மின் மீடியா
0

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை உங்கள் மொபைல் போனில் வாங்குவது எப்படி

UTS ஆன்லைன் லோக்கல் டிரெயின் டிக்கெட்,  சீசன் டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கலாம்

முதலில் இந்த ஆப் டவுன்லோடு செய்யுங்க

https://play.google.com/store/apps/details?id=com.cris.utsmobile

ஆப்பில் கேட்கப்படும் தகவல்களை வழங்கி, ID மற்றும் PIN ஐப் பதிவுசெய்துகொள்ளவும்.

பின்னர் அங்கு Wallet Recharge என்பதைக் கிளிக் செய்து, தொகையை  உள்ளிட்டு, ரீசார்ஜ் செய்துகொள்ளவும்.

ஆர்-வேலட்டிற்கு ரூ. 1,000-க்கு ரீசார்ஜ் செய்தால், ரூ. 1,050 வழங்கப்படும்

பின்னர் Normal booking என்பதில் ஸ்டேஷன் பெயர்களை உள்ளிட்டு, டிக்கெட்டைப் பெறலாம்,

பிரின்ட் செய்யத் தேவையில்லை. லோக்கல் டிக்கெட் எடுக்கும் போது, தண்டவாளத்தில் இருந்து 15 மீட்டருக்கும் அதிகமான தொலைவிலும்

ஸ்டேஷனிலிருந்து 1.5கிமீ மிகாமலும் இருக்க வேண்டும்.

GPS இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

சீசன் மற்றும் நடைமேடை டிக்கெட்டிற்கு GPS தேவையில்லை ஆனால் தொலைவு பொருந்தும்.

மொபைலில் உள்ள "show ticket" வசதி மூலம், டிக்கெட் பரிசோதனையின் போது டிக்கெட்டைக் காட்டலாம்.

ஆப் பயன்படுத்தி முன்பதிவில்லா பயணச்சீட்டை பெற்றுக்கொண்ட 3 மணி நேரங்களுக்குள் பயணிக்க வேண்டும்.

ஒருசெல்லிடப்பேசியில் பயணச்சீட்டை பெற்றுக் கொண்டு, அதை படமெடுத்து மற்றொருவரின் செல்லிடபேசிக்கு அனுப்பி பயன்படுத்த இயலாது.

எந்த செல்லிடப்பேசியில் பயணச்சீட்டு பெறப்படுகிறதோ, அதன் வழியே தான் பயணிக்க இயலும்.

ஒருமுறை வாங்கிய பயணச்சீட்டை பயன்படுத்தாத நிலையில், மறுமுறை பயன்படுத்த இயலாது. 

Give Us Your Feedback