Breaking News

நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசன்ஸ்

அட்மின் மீடியா
0

இனிமேல் நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசன்ஸ்



தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான லைசன்ஸ் கார்டுகள் பயன்படுத்தப்படுகிறது. 

டெல்லி டிரைவிங் லைசன்ஸ் ஒருமாதிரி இருக்கும், குஜராத் டிரைவிங் லைசன்ஸ் வேறு மாதிரி இருக்கும்.

ஆனால் நம்முடைய லைசன்ஸ் வேறு வேறு மாதிரி இருந்தாலும் எல்லாம் மாநிலங்களிலும் செல்லுபடியாகும். 

இந்த நிலையில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசன்ஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

அதன்படி தற்போது நாம் வைத்துள்ள லைசன்ஸ் களுக்கு பதிலாக அனைத்து மாநிலங்களிலும்  ஒரே மாதிரியான லைசன்ஸ் கொடுக்கப்படும் என்றும் அந்த டிரைவிங் லைசன்ஸ் ஸ்மார்ட் கார்டு , ஏ டி எம் கார்டு போல் இருக்கும்

அந்த கார்டில் புதிய சிப் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதை உருவாக்க உள்ளார்கள்  அதில் பொருத்தப்பட்டு இருக்கும் சிப்பில் க்யூ.ஆர். கோடு வழங்கப்படும். இதில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவோரின் அனைத்து விவரங்களும் இருக்கும் என்றும் அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Give Us Your Feedback