Breaking News

அப்பாடா ரெட் அலர்ட் இல்லையாம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விலக்க்கி கொள்ளப்பட்டது

கடந்த 3 நாட்களாக மக்களை ஆட்டி படைத்த வார்த்தை ரெட் அலர்ட் 

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக வருகிற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அளித்திருந்தது
 
குறிப்பாக நாளை  7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மிக கனமழை பெய்யும் என்று ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. 


இந்த  நிலையில், மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விலக்கி கொள்ளப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  
 


மேலும், அதி தீவிர மழைக்கு வாய்ப்பு இல்லாததால், ரெட் அலார்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாகவும், அக்டோபர் 8 ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  
 




Give Us Your Feedback