Breaking News

8 ம் தேதி வரை எவ்வளவு மழை பெய்யும்

அட்மின் மீடியா
0

எந்தெந்த தினங்களில் எவ்வளவு மழை பெய்யும்? 

இந்திய வானிலை மையம் அறிவிப்பு 

 

 

 

 அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையால்  விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஏரி, குளம் ஆகியன நிரம்ப தொடங்கிவிட்டது.

தமிழகத்தின் பலமாவட்டங்களில்  தொடர்ச்சியாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

5ஆம் தேதியான இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆம் தேதி

6ஆம் தேதியான நாளை தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் ஒரு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் மேலும் அரபிக் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



7ஆம் தேதி

7ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தமிழகம் கேரளாவின் ஒரு சில பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. அன்றைய நாளில்தான் தமிழகத்திற்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.



8ஆம் தேதி

8ஆம் தேதியான வரும் திங்கள் கிழமை தமிழகம் மற்றும் கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மேலும் அதிகாரபூர்வமான் வானிலை செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_29.html 



தற்போதைய சாட்டிலட் காட்சியை காண  கீழே கிளிக் செய்யுங்கள்


https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_15.html


Give Us Your Feedback