ரெட் அலர்ட் எச்சரிக்கை தயார் நிலையில் தமிழக அரசு
அட்மின் மீடியா
0
ரெட் அலர்ட் எச்சரிக்கை தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர்
அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக எதிர்வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களான
நீலகிரி,
கோவை,
தேனி,
கன்னியா குமரி
ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் தலைமையில் தலைமைச்செயலகத்தில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு கடலுக்குச் சென்றுள்ள அனைத்து மீனவர் களையும் தொடர்பு கொண்டு அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப கடலோர மாவட்ட கலெக்டர்கள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கனமழை காலங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கவேண்டியும், பெற்றோர் தங்களது குழந்தைகளை பத்திரமாக இருக்க அறிவுறுத்த வேண்டியும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான இடத்திற்கு அல்லது நிவாரண முகாம்களுக்கு செல்லவேண்டியும், நீர் நிலைகளிலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளிலும் பொதுமக்கள் ‘செல்பி’ எடுப்பதை தவிர்க்க வேண்டியும் மற்றும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்கவேண்டும் போன்ற தகவல்களை தண்டோரா, கேபிள் டிவி, ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்பு படையினர் மேடான பகுதிகளுக்கும், நிவாரண முகாம்களுக்கும் பாதுகாப்பாக அழைத்துச்சென்று தங்கவைப்பதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ள மக்களுக்கு போதிய உணவு, சுத்தமான குடிநீர், குழந்தைகளுக்குத் தேவையான பால் பவுடர், மருந்துகள், சுகாதார வசதிகள், ஜெனரேட்டர், போர்வை மற்றும் துணிமணிகள் போன்றவற்றை உடனடியாக வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கவேண்டும் அங்கேயே மருத்துவ பரிசோதனைகள் செய்ய நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்தவேண்டும்.
மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல்துறை மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அந்த நீரை உடனடியாக வெளியேற்றவேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிக மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதால், தனி கவனம் செலுத்தி அந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
மாநகராட்சிகளால் பராமரிக்கப்படும் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் உட்புகாமல் இருக்கும் வகையில், சுரங்கப் பாதைக்கு வெளியே சாலையின் குறுக்கே சிறிய மேடுகள் அமைக்கவேண்டும். இந்த தடுப்புகளை மீறி நீர் உட்புகுந்தால், அந்த
இந்த தடுப்புகளை மீறி நீர் உட்புகுந்தால், அந்த நீரை வெளியேற்றும் வகையில் உயர் திறன் கொண்ட டீசல் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும்.
கீழே விழும் மரங்களை உடனடியாக அகற்ற இரவு பணிக்குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.மழையினால் சேதம் அடையும் மின் கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கும் மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்கவேண்டும்.
வெள்ள நீர் தங்கு தடையின்றி செல்ல சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மழைநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் பொதுப்பணித்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும்.
மேற்கண்ட உத்தரவுகள் தமிழக அரசு சார்பில் பிரப்பிக்கபட்டுள்ளது.
