தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்
தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்
உயர்நீதிமன்றம் நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்
நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும்,
கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும்
என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்தப்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.
இதனால் சென்னையில் 4000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் ஓடவில்லை. இதனால் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் இன்று மாலை முதல் உற்பத்தியை நிறுத்தப் போவதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்கள்.
நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை எதிர்த்து இன்று மாலை முதல் கேன் குடிநீர் உற்பத்திய நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்
இதனால் தண்னீர் கேன் கிடைக்காமல்
மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்