செல்போன் கலாச்சாரத்தால் சீரழியும் மக்கள்
அட்மின் மீடியா
0
கடந்த காலங்களில் தொலைப்பேசியை பார்ப்பதே அதிசயமான ஒன்றாக
இருந்தது. நாளைடைவில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக செல்போன்
கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு காலத்தில் செல்போன் என்பது வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலை இருந்தது ஆனால் தற்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்க்கு வளந்துவிட்டது. பேசுவதற்க்கு செல்போன் இருந்த காலம் போய் மனித சமுதாயம் அழிவிற்க்கும் செல்போன் தான் முக்கிய காரணமாக இருக்கின்றது என்றே சொல்லக்கூடிய அளவிற்க்கு படிப்படியாக செல்போன் கலாச்சரம் உலகையே
ஆட்டிபடைத்து கொண்டிருக்கின்றது.
மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே அதில் செல்போன் மட்டும் விதிவிலக்கல்ல செல்போன் கதிர்வீச்சால் மனிதனுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டாலும், யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.
ஆனால் இன்று மாணவர்கள் கையில் செல்போன் மாணவிகள் கையில் செல்போன் இவர்கள் ப்டிப்பதற்க்கு நேரம் செலவிட்டதைவிட செல்போனில் நேரம் செலவிட்டதே அதிகம் என்று கூறும் அளவிற்க்கு உள்ளது
பழம் சுவையானதாகவும் உண்ணுவதற்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டுமானால் நன்கு
காய்த்தப் பின்பு தானாக கனியும் நிலையை அப்பழம் அடைய வேண்டும்.
அவ்வாறில்லாமல் காய்க்கும் பருவத்தை அடைவதற்கு முன்பு பிஞ்சாக இருக்கும்
நிலையில் பழுத்துவிட்டால் அதில் எந்தப் பயனும் இல்லை. குப்பைத் தொட்டி தான்
அது சேர வேண்டிய இடம். செல்போன்களால் சீரழிந்துகொண்டிருக்கும் இன்றைய இளைய
தலைமுறைகளுக்கு இந்த உதாரணம் மிகவும் பொருத்தமானது பெற்றோர்களே சிந்தனை செய்துகொள்ளுங்கள்.
மேலும் ஆண், பெண் பாகுபாடின்றி மணிக்கணக்கில் செல்போன் பேச்சிலேயே மூழ்கி
கிடக்கின்றனர். குறிப்பாக இளைஞர், இளம்பெண்கள் செல்போன்களுக்கு ஓய்வு
அளிப்பதே இல்லை.
சாலையில் நடக்கும் போதும், சாப்பிடும் போதும், அன்றாட
பணிகளை கவனிக்கும் போதும் அவர்களை செல்போன்
ஆக்கிரமித்து கொள்கிறது.
மீதி நேரத்தில் வாட்ஸப், பேஸ்புக், டப்ஸ்மேஷ், கேம்ஸ் என்று பொழுதை கழிக்கின்றார்கள்.ஏன் சிலர் கழிவறைக்கும் செல்போன் என்று செல்போனால் அடிமையாகி உள்ளார்கள்
உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் எதிர்கால ஆபத்தை உணராமல் அத்தியாவசியத்திற்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய தகவல் தொழில்நுட்பத்துக்கு முழு நேர அடிமையாகி விடுகின்றனர்.
செல்போன் இல்லாவிட்டால் உலகமே இல்லை என்ற உச்ச நிலைக்கு நாம் சென்றுவிட்டோம் என்றே கூறலாம்.
செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் உடல்நலம் பாதிக்கப்படுவது ஒரு புறம் இருந்தாலும் பலரது வாழ்க்கையை சீரழித்துள்ளது என்பது வேதனையான விஷயம். தவறான விஷயங்களை படம் பிடித்தல், ஆபாச படங்கள் பார்த்தல், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்புதல், செல்போன் சில்மிஷங்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் இளைஞர் சமுதாயம் சீரழிந்து வருகிறது.
மொபைல் போனால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பல இருந்தாலும் அழிவுப்பாதையையே மக்கள் விரும்புவது வருத்தத்திற்குரியது.
