Breaking News

போலியோ சொட்டு மருந்து தகவல் உண்மையா

அட்மின் மீடியா
0
போலியோ சொட்டு மருந்து போடக்கூடாது என சமூக வலைத்தளங்களில் பலரும் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்.


அந்த செய்தி உண்மையா ? போலியோ சொட்டு மருந்து போடலாமா?


தெலுங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட போலியோ மருந்தில், வைரஸ் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தில் இயங்கிவரும் `பயோமேட்' என்ற பெயரிலான, போலியோ சொட்டுமருந்து நிறுவன்ம் தான் அரசுக்கு அந்த போலியோ மருந்துகளை சப்ளை செய்து வருகின்றது.

எனவே அந்நிறுவனத்தை மூடி, சுகாதாரத்துறை அமைச்சகம் சீல் வைத்துள்ளது.மேலும் அதன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டார். 

எனவே 3 மாநிலங்களிலும் வழங்கப்பட்ட போலியோ சொட்டு மருந்தை உட்கொண்ட குழந்தைகளின் உடல்நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.அதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதும், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில், உண்மையோடு பொய்யையும் கலந்து வதந்தி செய்தியினை பரப்பி போலியோ சொட்டு மருந்துகளை இனிமேல் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று பிரச்சாரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 

மேலும் தமிழ்நாட்டிற்க்கும் இந்த போலியோ மருந்து சப்ளை செய்யும் கம்பெனிக்கு சம்மந்தம் இல்லை
 

இதுகுறித்து மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மூடப்பட்ட பயோமேட் நிறுவனத்தால் வினியோகிக்கப்பட்ட சொட்டுமருந்துகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும் எனவே யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில்  குழந்தைகளுக்கு வழக்கம்போல போலியோ சொட்டு மருந்துகளை வழங்கி, இளம் பிள்ளை வாதத்திற்கு எதிராக கைகோர்க்குமாறு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது. 

"வருங்காலங்களில் போலியோ தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்" என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Give Us Your Feedback