இந்தியாவில் இண்டர்நெட் சேவை முடங்காது
அட்மின் மீடியா
0
இந்தியாவில் இணையதள சேவை முடங்காது: தேசிய சைபர் செக்யூரிட்டி அதிகாரி அறிவிப்பு
உலக அளவில் அடுத்த 48 மணிநேரத்துக்கு இணையதள சேவை முடங்கும் வாய்ப்பு இருப்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.சி.ஏ.என்.என் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு தேசிய சைபர் செக்யூரிட்டி ஒருங்கிணைப்பாளர் குல்ஷன் ராய் கூறும்போது,
இந்தியாவில் இணையதளச் சேவை முடங்க வாய்ப்பில்லை என்றும்
தி இண்டர்நெட் கார்பரேஷன் ஆப் நேம்ஸ் அண்ட் நம்பர் என அழைக்கப்படும் சர்வதேச இணையதள சேவை அமைப்பு வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து முன்னேற்பாட்டு ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன
ஊடகங்களில் வரும் செய்தியைக் கண்டு பதற்றமடையத் தேவையில்லை.
இந்தியாவில் இணையதளச் சேவை முடங்க வாய்ப்பில்லை” என்று கூறினார்