எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
டிச.1க்குள் செல்போன் நம்பரை பதிவு செய்யுங்கள் -
எஸ்பிஐ அறிவிப்பு
நீங்கள் எஸ்பிஐ இண்டர்நெட் பேங்க் வாடிக்கையாளராக இருந்தால், டிசம்பர் 1 ஆம்
தேதிக்குள் செல்போன் எண்ணை பதிவு செய்யவும். இல்லை என்றால்
டிசம்பர் 1ஆம்
தேதிக்கு பின்னர் நீங்கள் நெட்பேங்கிங் வசதியை பயன்படுத்த முடியாது என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள்
திரும்பவும் பதிவு செய்யத் தேவையில்லை
செல்போன் எண் பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் வங்கி கிளைக்கு
நேரடியாகச் சென்று, அங்கு அளிக்கப்படும் படிவத்தில் தங்களது செல்போன் எண்ணை
பதிவு செய்து அளிக்கவும் என்று வலியுறுத்தியுள்ளது.
எனவே எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்பேங்கிங் வசதியில்,
தங்களது செல்போன் எண் பதியப்பட்டுள்ளதா என்பதை
சரிபார்த்துக் கொள்ளவும் என்று அட்மீன் மீடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம்.
