உங்கள் பேஸ்புக் தகவலை பாதுகாக்க
அட்மின் மீடியா
0
இன்றைய காலத்தில் பேஸ்புக் மிகவும் பிரபலமாக உள்ளது.
பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். நண்பர்களிடையே தகவல் மற்றும் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள சாட் செய்ய என பல
பயன்பாடுகள் இதில் உள்ளன. ஆனால் நம் தகவல்களை நமக்கு தெரியாமல் பலரும் திருடிகொள்கின்றார்கள் அதில் இருந்து தப்பிப்பது எப்படி.
1. Facebook Places என்பது நீங்கள் இருக்கும் இடத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்வது என்று கூறலாம். இதனால் பல பிரச்ச்னைகள் ஏற்படலாம் எனவே
இதனை Disable செய்து வையுங்கள். அதற்க்கு உங்கள் பேஸ்புக்கில் Account செல்லவும். அங்கு Privacy Settings
என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக
உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit
என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
2. மேலும் பேஸ்புக்கில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம். எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை.
நீங்கள் அனுப்பும் செய்தியினை யாரெல்லாம் பார்க்கலாம் என்று செட் செய்து கொள்லுங்கள் அதற்க்கு நீங்கள் செய்திய்னை ஷேர் செய்திடும் முன்பு அதில் நீங்கள் யாரை எல்லாம் ( Everyone, Friends of Friends,
Friends Only, அல்லது Customize ) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம்
என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத்
தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின்
மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும்
தேர்ந்தெடுக்கலாம்.
அதனை க்ளிக் செய்தால் கார்டு என க்ளிக்செய்த உடன் உங்கள் டிபி படங்கள் யாரும் டவுன்லோட் செய்யமுடியாது
