Breaking News

2 நாட்களுக்கு மழை பெய்யும்

அட்மின் மீடியா
0

வட கிழக்கு பருவ மழை, தீவிரம் அடைந்து, இரண்டு நாட்கள் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அக் 26ல், வட கிழக்கு பருவ மழை துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மழை துவங்கவில்லை.

இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், லேசான துாரல் துவங்கியது.

வடகிழக்கு பருவ மழை, இன்று முதல் தீவிரம் அடைந்து, கடலோர மாவட்டங்களில் கன மழையாக கொட்டும் என, தெரிகிறது.

நாளையும் நாளை மறுநாளும் மழை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறவங்க கடலின் தென் மேற்கில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நாளைக்குள், வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடையும். சென்னையில், சில இடங்களில் மிதமான மழை பெய்யும். மாநிலம் முழுவதும், படிப்படியாக மழை அதிகரிக்கும்.

மேலும் நாளை, ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகை, திருவாரூர், அரியலுார், பெரம்பலுர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், 11 செ.மீ., வரை மழை பெய்யும் என, மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


Give Us Your Feedback