வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அதிரடி சலுகை
வெளிநாட்டில் குடியேறி அந்நாட்டு உரிமை பெற்ற இந்தியர்களுக்கு ஓ.சி.ஐ. ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியன் எனப்படும் வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமகன் என்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
வெளிநாட்டில் குடியேறி அந்நாட்டு பிரஜா உரிமை பெற்றவர்களுக்கு 2006ம் ஆண்டு முதல் வெளிநாட்டு வாழ் இந்திய குடிமகன் - ஓ.சி.ஐ., என்ற அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
ஓ.சி.ஐ., அடையாள அட்டை வைத்திருப்பவர்களை திருமணம் செய்யும் வெளிநாட்டினருக்கு இதுநாள் வரை ஓ.சி.ஐ., அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தற்போது அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது ஓ.சி.ஐ., அடையாள அட்டை வைத்திருப்பவரை திருமணம் செய்யும் வெளிநாட்டினர் ஓ.சி.ஐ., அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
இதன்படி ஓ.சி.ஐ., அடையாள அட்டை பெறுபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பல்நோக்கு காரணங்களுக்காக இந்தியாவிற்குள் வந்து செல்லலாம்.
ஓ.சி.ஐ., அடையாள அட்டைஉள்ளவர்களுக்கு வாழ் நாள் விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.