இன்று இடைதேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம்
அட்மின் மீடியா
0
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியாகலாம்
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர் ஏ.கே.போஸ். இவர் உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்டு 2-ஆம் தேதி மரணம் அடைந்தார்.
அதேபோல் முன்னால் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி மறைந்தார்.
ஒரு தொகுதி காலியானால், அதற்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை.
இந்த நிலையில்தான் இன்று தேர்தல் ஆணையர் டெல்லியில் பகல் 3 மணியளவில் நிருபர்களை சந்திக்க உள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து அப்போது அவர் அறிவிப்பு வெளியிட்டுவார். என்று எதிர்பார்க்கபடுகின்றது
திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கும் அப்போது இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
